அரவக்குறிச்சியில் 100குளம் வெட்டப்படும்: பாஜக அண்ணாமலை

அரவக்குறிச்சியில் 100குளம் வெட்டப்படும்:  பாஜக அண்ணாமலை
X

அரவக்குறிச்சி தொகுதியில் 100 புதிய குளங்கள் வெட்டப்படும் என இறுதிகட்ட பரபரப்புரையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொகுதிக்காக வெளியிட்டுள்ள தனி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை இறுதிக் கட்ட பரப்புரை இன்று காலை தொடங்கினார். தொகுதிக்குட்பட்ட தளவாபாளையத்தில் பரப்புரையை தொடங்கிய அவர் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற பரப்புரையில்,அரவக்குறிச்சி தொகுதிக்கான தனி செயல் திட்ட அறிக்கையை வெளியிட்டார். அதில் அரவக்குறிச்சி தொகுதியில் புதிதாக 100 குளங்கள் தண்ணீர் நிரப்பப்படும், 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு, வீடு இல்லா குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, முருங்கை வாரியம் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளித்தார்.

தொடர்ந்து அண்ணாமலை வாக்கு கேட்டு பேசுகையில், தொகுதியில் 6 இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு மக்கள். பிரச்னைகள் தீர்க்கப்படும். நீங்கள் அளிக்கும் வாக்கு நல்லவருக்கான வாக்கு, நேர்மைக்கான வாக்கு. உடலில் உயிர் இருக்கும் வரை அரவக்குறிச்சி தொகுதி மக்களுடனான உறவு இருக்கும். பெண்கள் முகத்தில் இன்றே தாமரை மலர்ந்துவிட்டது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப் பதிவு இயந்திரத்தில் தாமரை மலர வேண்டும் என பேசினார்.

Next Story
ai solutions for small business