கொரோனா நோயாளிகள் சிகிச்சை அமைச்சர் ஆய்வு..

கொரோனா நோயாளிகள் சிகிச்சை அமைச்சர் ஆய்வு..
X
கரூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மூன்று நிலைகளாகப் பிரித்து சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க 8 இடங்களில் ஆக்சிஜன் கன்கான்சன்ரேட்டருடன் கூடிய தலா 40 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன

இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல சிகிச்சை அளிக்க முடியும் என மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்றை தடுப்பது தொடர்பான மருத்துவ துறை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

இதில் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் எம்பி ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர் அப்போது கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க மருத்துவத்துறை வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.தொடர்ந்து அவர் கரூர் பழைய அரசு மருத்துவமனையில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மூன்று நிலைகளாகப் பிரித்து சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் நிலையில் லேசான தொற்று உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாத நபர்களை சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்து சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலையானது குறைந்த அளவு ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்காக கரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் தலா 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆக்சிஜன் கான்சன்ரேட்டருடன் கூடிய 40 படுக்கை வசதிகளுடன் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது

இங்கு குறைந்த அளவு ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

அதிகப்படியான ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கை வசதிகள் உள்ளன மேலும் கரூர் மாவட்டத்துக்கு தேவைப்படும் ஆக்சிஜனை இருப்பு வைக்கவும் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!