தேர்தலுக்காக முதல்வர் பணம் கொடுக்கிறார் செந்தில்பாலாஜி

தேர்தலுக்காக முதல்வர் பணம் கொடுக்கிறார் செந்தில்பாலாஜி
X

கொரோனா காலத்தில் பணம் கொடுக்க முடியாது என சொன்ன தமிழக முதல்வர் தற்போது தேர்தலுக்காக குடும்ப அட்டைக்கு 2500 ரூபாய் கொடுக்கிறார் என கரூரில் திமுக சார்பில் கிராம சபை கூட்டத்தில் பேசிய செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த வெங்கடாபுரத்தில் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி மன்ற பொறுப்பாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது செந்தில் பாலாஜி பேசிய போது, தற்போது தமிழகத்தில் படித்த இளைஞர்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலை, வட மாநில இளைஞர்கள் தமிழகத்தில் அதிக அளவு பணிகளில் அமர்த்தப்படுகிறார்கள். காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லும் கைதி உயிரிழப்பு ஏற்படுகிறது என்ற புள்ளி விபரத்தில் இந்திய அளவில் 5ல் ஒன்று தமிழகத்தில் 1 நடக்கிறது. கொரோனா காலத்தில் பணம் கொடுக்க முடியாது என சொன்ன முதலமைச்சர் தற்போது தேர்தலுக்காக குடும்ப அட்டைக்கு 2500 ரூபாய் கொடுக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture