கரூரில் விமானநிலையம் நிச்சயம் முதல்வர் கொண்டு வருவார், அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூரில் விமானநிலையம் நிச்சயம் முதல்வர் கொண்டு வருவார், அமைச்சர் செந்தில்பாலாஜி
X

அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூரில் தமிழக முதலமைச்சர் விமானநிலையம் கொண்டு வருவார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புத்தாம்பூர் அருகே ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா வளாகத்தில் கரூர் மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களுடான ஆலேசானை கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் ஜவுளி துறை அமைச்சர் காந்தி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கைத்தறி மற்றும் ஜவுளி துறை ஆணையர் பீலா ராஜேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசியதாவது:

ஜவுளித்துறையில் 450 கோடி வர்த்தகமும், 4500 பேர் நேரடியாகவும், ஒன்றரை லட்சம் பேர் மறைமுகமாகவும் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஜவுளித்துறையில் ஈடுபடுவோரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார். அப்போது அவர் கூறியாதாவது:

கரூர் மாவட்டத்தில் ஜவுளி துணி, கொசுவலை, பேருந்து கூண்டு கட்டுதல் பிரதான தொழிலாக உள்ளது. ஜவுளித் துறைக்கு முக்கியமான சாயப்பட்டறை பூங்கா அமைப்பது கடந்த காலத்தில் செயல்படுத்த முடியாத நிலையில், தற்போது அது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜவுளி பூங்காவிற்கு நிச்சயம் அனுமதி அளித்து, நிதியையும் ஒதுக்குவார். தொழில் வளர்ச்சி பெற வேண்டும், விவசாயமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் சாயப்பட்டறை பூங்கா அமைக்கப்படும்.

தேர்தல் அறிக்கையில் முதல்வர் கூறியது போல கரூர் மாவட்டத்தில் விமானம் நிலையம் அமைக்க வழி வகை செய்யப்படும். 100% வளர்ச்சி பெற்ற மாவட்டமாக கரூர் மாறும் என்று அவர் பேசினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!