/* */

கரூர் மாவட்டத்தில் 13,535 பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர்

மின்சார வாரியத்தின் சார்பாக மின் இணைப்புகளை நுகர்வோர்கள் தங்களது ஆதாருடன் இணைக்க வேண்டும் என அண்மையில் தெரிவித்தது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் 13,535 பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர்
X

காட்சி படம் 

தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் சார்பாக மின் இணைப்புகளை நுகர்வோர்கள் தங்களது ஆதாருடன் இணைக்க வேண்டும் என அண்மையில் தெரிவித்தது.

தமிழகம் முழுவதும், 100 யூனிட் மின்சாரத்தை கட்டணம் இன்றி பெற விரும்புவோர்கள் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். இதுகுறித்து மின்சார வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள 2.36 கோடி மின் பயனாளர்கள், 21 லட்சம் விவசாய இணைப்புகள் மற்றும் கைத்தறி விசைத்தறி தொழிளார்கள் ஆகியோர் தங்கள் 100 யூனிட்கள் கட்டணமில்லா மின்சாரத்தை தொடர்ந்து பெற ஆதாரை இணைக்க தமிழக மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்காக, தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வந்தது. நுகர்வோர்கள் மின்சார நுகர்வு எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது.

இதற்கான கடைசி நாள் வருகிற 31-ந்தேதி ஆகும்.

இதில் கரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 879 வீட்டு மின் இணைப்புகளும், 12 ஆயிரத்து 971 குடிசை வீடுகளின் மின் இணைப்புகளும், 53 ஆயிரத்து 87 விவசாய பம்பு செட் மின் இணைப்புகளும் உள்ளன. இதில் கடந்த 28-ந்தேதி வரை கரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 535 பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 53 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு, அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. மேலும் மக்கள் அதிகமாக வந்தால் சிறப்பு கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

மேலும் ஆதாரை இணைப்பதற்காக கரூரில் கோவை-ஈரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம், தாந்தோணிமலை, வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருவதாக கரூர் மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 1 Dec 2022 3:13 AM GMT

Related News