கரூரில் வாகனங்களில் பம்பர் அகற்றம்

கரூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கார்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பர்களை கழட்டியதோடு, அபராதம் விதித்தனர்.

சாலை விபத்துக்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு, நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் பம்பர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், காரிலிருந்து பம்பர்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதற்காக பல்வேறு இடங்களில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் சோதனை நடக்கும் இடத்திலேயே பம்பர்கள் கழற்றப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கரூர் வெங்கக்கல்பட்டி பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பம்பர் பொருத்தப்பட்ட சொகுசு கார்கள், சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். மேலும், அபராதமும் விதித்தனர்.இதேபோல, மண்மங்கலம், அரவக்குறிச்சி மற்றும் குளித்தலை பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகன தணிக்கை மேற்கொண்டு பம்பர் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து பம்பர்களை அகற்றினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!