திமுக எம்எல்ஏவிற்கு பிடிவாரண்ட்.. கரூர் கோர்ட் உத்தரவு

குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கரூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் மாணிக்கம்(62). குளித்தலை தொகுதியின் திமுக எம்எல்ஏ ஆவார். இவர் கரூரை சேர்ந்த ராஜம்மாளிடம், கடந்த ஆண்டு 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கடனை திருப்பி செலுத்தும் விதமாக, மாணிக்கம் வங்கி செக்புக் ஒன்றை ராஜம்மாளிடம் தந்துள்ளார். அந்த செக்கை, பேங்குக்கு கொண்டு போனால், உரிய தொகை இல்லாமல் செக் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது.. இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜம்மாள் கரூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எம்எல்ஏ மாணிக்கத்தை நேரில் ஆஜராக 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது. அதாவது, கடந்த அக்டோபர் மாதம் 18ம் தேதி மற்றும் டிசம்பர் மாதம் 2ம் தேதி, ஜனவரி மாதம் 24ம் தேதி என 3 முறை நீதிபதி சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். சம்மன் இந்நிலையில் 4வது முறையாக நேற்றும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நேற்றும் அவர் ஆஜராகவில்லை. இதனால், கடுப்பான நீதிபதி சரவணபாபு அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். செக் மோசடி வழக்கில் ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவர் பிடிவாரண்ட் வரை சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... விரைவில் கைது? அநேகமாக எம்எல்ஏ மாணிக்கம் கைது செய்யவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் கரூர் மாவட்டத்தை திமுக கைப்பற்றி உள்ளது. முழுமையாக ஸ்வீப் செய்தும்விட்டது.. இங்குள்ள 48 வார்டுகளில் 3 நகராட்சிகளையும் சேர்த்து மொத்தம் 75 நகராட்சி வார்டுகள் உள்ளன. என்னாகும்? இதேபோல 123 பேரூராட்சி வார்டுகள் உள்ளன. இங்கு பெரும்பான்மையை திமுக கைப்பற்றி விட்ட நிலையில், அந்த குஷியில் மாவட்டமே திளைத்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், திமுக எம்எல்ஏவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பது திமுகவினரிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவேளை, எம்எல்ஏ கைதானால், கரூரில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்