கருணாநிதியின் உதவியாளராக இருந்த சண்முகநாதன் காலமானார்.
சண்முகநாதன் மற்றும் கருணாநிதி
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் எழுத்தாணியாக விளங்கிய உதவியாளர் சண்முகநாதன் காலமானார். வயோதிகம், உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வரின் நிழலாகப் பார்க்கப்பட்டவர் சண்முகநாதன். 48 ஆண்டுகளாக கருணாநிதியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர், கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி காலமானார்.
தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்து நிருபராக தனது வாழ்க்கையை தொடங்கிய சண்முகநாதன், எதிர்க்கட்சி தலைவர்கள் மேடையில் பேசுவதை குறிப்பெடுத்து தட்டச்சி செய்து அரசுக்கு அனுப்புவார். அறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பின்னர் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றபோது, 1969ம் ஆண்டில் கருணாநிதியின் உதவியாளராக நியமிக்கப்பட்ட சண்முகநாதன், கருணாநிதி உயிரிழக்கும் வரை 48 ஆண்டு காலம் அவரது உதவியாளராகவே இருந்து வந்தார்.
எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர். கருணாநிதியின் அரசியல் வாழ்வின் ஆவணமாக திகழ்ந்தவர் சண்முகநாதன். கருணாநிதியின் மனச்சாட்சி என்று திமுகவினரால் அழைக்கப்பட்டவர்.
சண்முகநாதன் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று திமுக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu