/* */

ஆஸ்கர் விருதை சொந்தமாக்கிக் கொண்ட கார்த்திகி கோன்சால்வெஸ் யார்..?

முதுமலை சரணாலயத்தில் யானைகளை பராமரித்து வந்த தம்பதிகள் குறித்த ஆவண படமான படமாக்கப்பட்ட “ தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்” படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

HIGHLIGHTS

ஆஸ்கர் விருதை சொந்தமாக்கிக் கொண்ட கார்த்திகி கோன்சால்வெஸ் யார்..?
X

பைல் படம்.

2023 ஆம் ஆண்டிற்கான 95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதனையடுத்து சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட முதுமலை யானைகள் சரணாலய தம்பதிகள் குறித்த ஆவணப்படமான தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படத்தை உதகையை சேர்ந்த கார்த்திகி கோன்சால்வெஸ் இயக்கியுள்ளார். இப்படத்தை குனீத் முங்கா தயாரித்துள்ளார்.

யார் இந்த கார்த்திகி கோன்சால்வெஸ் ..?

டிமோதி ஏ.கோன்சால்வெஸ் மற்றும் பிரிசில்லா தம்பதிக்கு 1986 நவம்பர் 16ம் தேதி கார்த்திகி பிறந்தார். பிறந்து வளர்ந்தது எல்லாம் ஊட்டியில் தான். தனது பள்ளிப் படிப்பை ஊட்டியில் படித்த அவர் 2007ல் இளங்கலை படிப்பை கோயம்புத்தூரில் உள்ள டாக்டர் ஜி ஆர் தாமோதரன் அறிவியல் கல்லூரியில் முடித்தார். இவரது தந்தை ஒரு கணினி பொறியியலாளர் மற்றும் இவருக்கு டனீக்கா என்னும் தங்கை உள்ளார்.

கல்லூரியில் படிப்பை தொடர்வதற்கு முன்பே புகைப்படம் எடுப்பதில் அதிகம் ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் ஈடுபடத் தொடங்கினார். கார்த்திகிக்கு புகைப்படம் எடுப்பது மீதான ஆர்வத்தால் ஆவணப்படம் மற்றும் Professional Photography எடுப்பதில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

இதற்கு முன்பு புகழ்பெற்ற விலங்குகள் தொடர்பான ஆங்கில தொலைகாட்சியான அனிமல் பிளேனட் மற்றும் டிஸ்கவரி தொலைகாட்சியில் பணிபுரிந்துள்ளார். வன விலங்குகள் மீதும் அந்த விலங்குகளை புகைப்படம் எடுப்பதும் கார்த்திகிக்கு மிகப் பிடித்தமான செயல்.


முதுமலையில் உள்ள யானைகளை பராமரித்து வரும் தம்பதிகளான பொம்மன் மற்றும் பெள்ளியை சந்தித்து அவர்களது இயல்பான வாழ்க்கையை “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” எனும் பெயரில் குறும்படமாக இயக்கியுள்ளார். இப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த குறும்படத்தை எடுத்து முடிக்க அவருக்கு 5 ஆண்டுகள் ஆனது. மொத்தம் 450 மணி நேரம் இதனை படமாக்கிய கார்த்திகி அதனை 41 நிமிடங்களாக வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் குனீத் முங்கா யார்..?

“தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” படத்தை தயாரித்துள்ள குனீத் முங்கா 1986 ம் வருடம் நவம்பர் மாதம் 21ம் தேதி பிறந்தார். டெல்லியைச் சார்ந்தவரான இவர் தனது பள்ளி மற்று கல்லூரி படிப்பை டெல்லியிலேயே பயின்றார். 20க்கும் மேற்பட்ட படங்களை இவர் தயாரித்துள்ளார்.

தி ஹாலிவுட் ரிப்போர்ட்டரால் உலகளாவிய பொழுதுபோக்கு துறையில் சிறந்த 12 பெண் சாதனையாளர்களில் ஒருவராக மோங்கா பரிந்துரைக்கப்பட்டார். அதேபோல இந்தியா டுடே மூலம் இந்தியாவை மாற்றும் முதல் 50 இந்தியர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 இல் குனீத் மோங்காவுக்கு பிரெஞ்சு அரசாங்கத்தால் செவாலியே விருது வழங்கப்பட்டது.

Updated On: 13 March 2023 5:45 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்