கேரளாவில் உச்ச நிலையில் ஜிகா வைரஸ், குமரியில் சோதனையை தீவிரப்படுத்தப்படுத்த கோரிக்கை

கேரளாவில் உச்ச நிலையில் ஜிகா வைரஸ், குமரியில் சோதனையை  தீவிரப்படுத்தப்படுத்த கோரிக்கை
X
கன்னியாகுமரி சோதனைச் சாவடி ( பைல் படம்)
கேரளாவில் ஜிகா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், குமரியில் சோதனையை தீவிரப் படுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளா மாநிலத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறையாத நிலையில் அம்மாநில அரசு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்து உள்ளது.

இந்நிலையில் ஜிகா வைரசின் தாக்கமும் கேரளாவில் அதிகரித்து வருகிறது, முதன் முதலாக கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்ட தற்போது வரை கேரளாவில் ஜிகா வைரஸால் 28 நபர்களுக்கும் மேல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கேரளா மற்றும் தமிழகத்தை இணைக்கும் கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் சோதனை தீவிரப்படுத்தப்படாததால் கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கேரளாவில் ஜிகா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் சர்வ சாதாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து செல்கின்றன.

இதன் காரணமாக நோய் தொற்று பெருமளவில் குறைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் நோய் தொற்று அதிகரிக்கும் சூழ்நிலையும் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது.

இதனிடையே 20 நாட்களில் கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொருட்கள் வாங்க கேரளாவை சேர்ந்த பொதுமக்கள் குமரிக்கு பெருமளவில் வருவார்கள் என்பதால் சோதனை சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!