அணைகட்டு பகுதியில் பைக் ரேஸ் - மாவு காட்டுக்கு ஆளான இளைஞர்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள நெய்யாறு அணைகட்டு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வெகு விமரிசையாக வந்து செல்வது வழக்கம். இந்த பகுதியில் பல இடங்களில் இருந்தும் இளைஞர்கள் ஏராளமானோர் தினசரி இருசக்கர வாகனங்களில் வந்து பைக் ரேஸ் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் ஊர் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலை இருந்து வருவதாகவும். இந்த நிலையில் 3 பைக்குகளில் 7 இளைஞர்கள் நெய்யாறு அணைகட்டு பகுதிக்கு வந்து சாலையில் பைக் ரேஸ் நடத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது அந்த சாலையில் அந்த பகுதியை சேர்ந்த இரண்டு பேர் புல்லட் வாகனத்தில் வந்துள்ளனர், இதனிடையே பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் தனது பைக்கை நடுரோட்டில் திடீரென திருப்பி உள்ளார்.
அப்போது பின்னால் வந்த புல்லட் இளைஞரின் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது உடனே புல்லட்டில் வந்த இரண்டு பேரும் ஆத்திரத்துடன் இறங்கி அந்த இளைஞரை சரமாரியாக தாக்கிய உள்ளனர்.
இதில் அந்த இளைஞரின் கால் முறிவு ஏற்பட்டு வலியால் கத்தவே உடன் இருந்த நண்பர்கள் மன்னிப்பு கேட்டு அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அந்த இளைஞரின் கால் எலும்புகள் முறிந்து மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகிறார், இந்த விபத்தில் சிக்கி கால் முறிவு ஏற்பட்ட நபர் கேரள மாநிலம் வட்டியூர்காவு பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என தெரியவந்துள்ளது. தற்போது இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu