மதமாற்றம் செய்வதாக மூன்று இளம் பெண்களை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

மதமாற்றம் செய்வதாக மூன்று இளம் பெண்களை  போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்
X

புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட மூன்று பெண்கள். 

குமரியில் மதமாற்றத்திற்கு வற்புறுத்தியதாக மூன்று இளம் பெண்களை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளான மீன் சந்தை மற்றும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க மூன்று இளம் பெண்கள் கைகளில் பைபிளுடன் வந்து பிரார்த்தனை செய்வதாக கூறி மக்களிடம் பைபிள் மற்றும் கிறிஸ்தவ வாசகங்கள் அடங்கிய புத்தகங்களை திணித்துள்ளனர். இப்படி தொடர்ந்து மதமாற்ற செயலில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பார்த்திவபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் சென்று பைபிள் வழங்கியபோது அங்குள்ள மக்கள் அவர்களிடம் எதிர்ப்பு தெரிவித்து மூன்று பெண்களையும் சிறைபிடித்தனர்.

மேலும் புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மூன்று பெண்களையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மதமாற்ற செயலில் ஈடுபட்டு மூன்று பெண்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story