''நம் நாட்டின் பெண்கள் திறமைசாலிகள்''-தெலுங்கானா கவர்னர் தமிழிசை

நம் நாட்டின் பெண்கள் திறமைசாலிகள்-தெலுங்கானா கவர்னர் தமிழிசை
X

பத்ரேஸ்வரி அம்மன் கல்வியியல் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்த .தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்.

நம் நாட்டின் பெண்கள் திறமைசாலிகள் என குமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற கல்லூரிகளில் ஒன்றாக உள்ளது கூட்டாலுமூடு பகுதியில் அமைந்துள்ள பத்ரேஸ்வரி அம்மன் கல்வியியல் கல்லூரி.

இந்த கல்லூரியில் பயின்று பட்ட படிப்பை முடித்த மாணவ மாணவிகளுக்கு கொரோனா காரணங்களால் கடந்த இரண்டு வருடங்களாக பட்டமளிப்பு நடத்தப்படாமல் இருந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து இன்று பட்டமளிப்பு விழா நடந்தது.

இந்த விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த அவர் அங்கிருந்து விழா மேடைக்கு வந்து குத்துவிளக்கு ஏற்றி மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது பெண்கள் எப்போதும் தைரியம் மிக்கவர்களாக இருக்கவேண்டும் காரணம் நமது நாட்டின் பெண்கள் மிகவும் திறமைசாலிகள் தன்னம்பிக்கையுடன் இருந்தால்தான் மகிழ்ச்சியாக வாழமுடியும்.

மேலும் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது புகுந்த வீட்டில் இருந்து தாய்வீட்டிற்கு வந்திருக்கும் மகிழ்ச்சியை தந்திருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் ஆளுநருக்கு நினைவு பரிசை வழங்கி கவுரவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!