53 கோடி கள்ள நோட்டை காட்டி மோசடி செய்த பெண் கைது

53 கோடி கள்ள நோட்டை காட்டி மோசடி செய்த பெண்  கைது
X
கன்னியாகுமரியில் 53கோடி ரூபாய் கள்ள நோட்டுக்களை காட்டி மோசடி செய்ய முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ள நோட்டுக்கள், மற்றும் போலியான நோட்டுகளை புழக்கத்தில் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.


அதன்பேரில் மாவட்டத்தில் தனிப்படை ஏற்படுத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் பளுகல், கொடவிளாகம் பகுதியை சேர்ந்த சிந்து(34) W/O சிபு என்பவர் லோன் வாங்கி தருவதாக கூறி போலியான ரூபாய் நோட்டுகளை காண்பித்து மோசடி செய்து வருவதாக செம்மங்காலை பகுதியை சேர்ந்த வினுக்குமார் என்பவர் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விரைந்து சென்ற தனிப்படையினர் சிந்துவிடம் சென்று விசாரணை செய்ததில் அவர் போலியான நோட்டுகளை காண்பித்து மோசடி செய்வது தெரியவந்தது. உடனே அருமனை காவல் நிலைய ஆய்வாளர் ஞானராஜ் அவர்கள் சிந்து மீது வழக்குபதிந்து அவரை கைது செய்தார். அவரிடமிருந்து ரூபாய் 52 கோடியே 61 லட்சம் மதிப்பிலான போலி நோட்டுகள் கைப்பற்றபட்டது . போலி நோட்டுகளை காண்பித்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை உடனடியாக கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

Tags

Next Story