குமரியில் 5 நாட்களாக மின்சாரம், உணவு, குடிநீர் இன்றி தவித்த கிராம மக்கள்

குமரியில் 5 நாட்களாக மின்சாரம், உணவு, குடிநீர் இன்றி தவித்த கிராம மக்கள்
X
கன மழையில் பாதித்த கன்னியாகுமரி மாவட்ட கிராம மக்கள்.
குமரியில் வெள்ளம் சூழ்ந்ததால் 5 நாட்களாக மின்சாரம், உணவு, குடிநீர் இன்றி கிராம மக்கள் தவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 72 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மிக கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்து உள்ளது.

மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளிலும் தொடர்ந்த கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியதால் அணைகளில் இருந்து வினாடிக்கு 47 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் மழை நின்று 48 மணி நேரம் கடந்தாலும் அணைகளில் இருந்து தற்போதும் வினாடிக்கு 8000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால் தாழ்வான பகுதிகளான , பருத்தி கடவு, வைக்கல்லூர், பார்திபபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் புகுந்ததால் 600 க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர்.

ஏற்கனவே பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ள நிலையில் கடந்த 5 நாட்களாக மின்சாரம், உணவு, குடிநீர், போக்குவரத்து இன்றி தவித்து வரும் தங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டினர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare