குமரியில் சோதனையின்றி நுழையும் வாகனங்கள் - பொதுமக்கள் அச்சம்

குமரியில் சோதனையின்றி நுழையும் வாகனங்கள் - பொதுமக்கள் அச்சம்
X

கேரளாவில்  இருந்து எவ்வித சோதனையும் இல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் நுழையும் வாகனங்கள்.

கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்தில் சோதனையின்றி நுழையும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கும் கேரளாவில் நாள் ஒன்றுக்கு 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதோடு உருமாறிய டெல்டா பிளஸ் மற்றும் ஜிகா வைரசின் தாக்கமும் கேரளாவில் அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் குமரிமாவட்ட எல்லை சோதனை சாவடிகள் வழியாக எந்த வித சோதனையும் இன்றி சர்வ சாதாரணமாக வந்து செல்வதால் குமரியில் நோய் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.

அதோடு கேரளாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கிய பண்டிகையாக ஓணம் பண்டிகை வரும் 11 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்காக புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க கேரளாவை சேர்ந்த ஏராளமானோர் குமரிமாவட்டம் வருகின்றனர்.

கேரளாவில் இருந்து ஈ பாஸ் பெற்று எல்லை சோதனை சாவடிகளான களியக்காவிளை, நெட்டா, ஊரம்பு உள்ளிட்ட 7 சோதனை சாவடிகள் வழியாக வாகனங்களில் வரும் நபர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள நிலையில் சோதனை சாவடிகள் எந்த வித சோதனைகளும் இன்றி அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படுவது குமரிமாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story