அனுமதி இன்றி போராட்டம் - பாஜக எம்.எல்.ஏ உட்பட 250 பேர் கைது

அனுமதி இன்றி போராட்டம் - பாஜக எம்.எல்.ஏ உட்பட 250 பேர் கைது
X

குமரியில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு நடந்தது.

குமரியில் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ உட்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் பாஜக நிர்வாகி மீது போலீசார் பொய்வழக்கு பதிவு செய்து இருப்பதாக கூறியும் அதனை கண்டித்தும் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி தலைமையில் பாஜக சார்பில் அனுமதியின்றி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர்.அப்போது போலீசாருக்கும் பஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மேலும் மேற்கு கடற்கரை சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ எம்.ஆர் காந்தி உட்பட 250 மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business