ரூ.3 கோடியை ஏமாற்றிய தொழில் அதிபரை முற்றுகையிட்ட பெண்ணால் பரபரப்பு
ரூ.3 கோடி ஏமாற்றிய தொழில் அதிபரை நகர விடாமல் தடுத்த பெண்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் கலா. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவரது குடும்பத்திற்கும் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ஜோயி அலெக்ஸ் என்பவரது குடும்பத்துக்கும் இடையே நீண்ட கால நட்பு இருந்து வந்தது.
இந்நிலையில் ஜோஸ் அலெக்சிற்கு கலா ரூ. 3 கோடி கடனாக வழங்கி உள்ளார். இந்த பணத்தை திரும்ப கொடுக்க காலதாமதம் ஏற்பட்டபோது பதிக்கப்பட்ட பெண் பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கும் தக்கலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் மார்த்தாண்டம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
இது சம்மந்தமாக விசாரணை மேற்கொண்ட போலீசார் தொழிலதிபருக்கு சொந்தமான நிலத்தை தற்போது விற்பனை செய்யக்கூடாது என கூறி இருந்தனர்.
இந்நிலையில் இன்று அந்த தொழில் அதிபர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனது 53 சென்ட் நிலத்தை இன்னொரு நபருக்கு விற்பனை செய்து அதை மார்த்தாண்டம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வந்துள்ளார்.
இது குறித்த தகவல் தெரிந்து சார்பதிவாளர் அலுவலகம் வந்த பெண், தொழில் அதிபர் மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
காலையில் இருந்தே இந்த போராட்டத்தில் பெண் ஈடுபட்டு வந்த நிலையில் மாலையில் சம்பவ இடம் வந்த மார்த்தாண்டம் போலீசார் காவல்நிலையத்தில் வைத்து பேசலாம் என கூறி அழைத்தனர்.
ஆனால் கலா தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பெண் காவலர்களை வைத்து கலாவை அப்புறப்படுத்திய போலீசார் தொழிலதிபரை அனுப்பி வைத்ததோடு கலாவை காவல்நிலையம் வரக்கூறி விட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu