இரு பஸ்களுக்கு இடையே சிக்கிய இருசக்கர வாகன ஒட்டி - பரபரப்பு

இரு பஸ்களுக்கு இடையே சிக்கிய இருசக்கர வாகன ஒட்டி - பரபரப்பு
X

இரு பஸ்களுக்கு இடையே சிக்கிக் கொண்ட டூவீலர் ஓட்டிச் சென்ற நபர். 

கேரளாவில், இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கி கொண்ட இருசக்கர வாகன ஒட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பரூக் என்ற பகுதியில், ஒரு தனியார் பேருந்து, மற்றொரு தனியார் பேருந்தை முந்தி செல்வதற்காக, அதிவேகத்தில் சென்றுள்ளது. இதில் போட்டி போட்டு முந்தி செல்ல முயன்ற இரு தனியார் பேருந்துகளுக்கு இடையே, எதிரே வந்த இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் சிக்கி கொண்டு அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இதனிடையே சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து கேரளா போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் போட்டிபோட்டு கொண்டு அபாயகரமாக வாகனங்களை இயக்கியதாக கூறி, இரு தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுனர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture