பள்ளி மாணவர்களின் விளையாட்டு விபரீதத்தில் முடிந்தது: குமரியில் ருசிகரம்

பள்ளி மாணவர்களின் விளையாட்டு விபரீதத்தில் முடிந்தது: குமரியில் ருசிகரம்
X

மாணவர் ஒருவர் உடன் படிக்கும் மாணவி ஒருவருக்கு செயின் ஒன்றை விளையாட்டாக கட்டி விடுகிறார்.

குமரியில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டி விளையாடிய வீடியோ வைரல் ஆன நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான பளுகல் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் வகுப்பு இடைவேளை நேரத்தில் சமூக வலைதளங்களில் பதிவுகள் போட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் வகுப்பறைக்குள் விளையாட்டாக தாலி கட்டி திருமணம் செய்வது போன்று மாணவர் ஒருவர் உடன் படிக்கும் மாணவி ஒருவருக்கு செயின் ஒன்றை விளையாட்டாக கட்டி விடுகிறார்.

அதனை மாணவியும் விருப்பத்துடன் ஏற்றுகொள்ள சுற்றி நிற்கும் சக மாணவர்கள் பேப்பர் தாள்களை பூக்களாக தூவி ஆசிர்வாதம் செய்கின்றனர். இது சம்பந்தமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியதை தொடர்ந்து மாணவியின் தந்தை பளுகல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் சர்ச்சைக்கு உள்ளான மாணவர் மற்றும் மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் டிசியை வழங்கி பள்ளியை விட்டு நீக்கி உள்ளார். கொரோனா விடுமுறைக்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ai based healthcare startups in india