குமரி சர்ச் கொள்ளை வழக்கில் 2 மாதத்திற்கு பின் குற்றவாளி கைது

குமரி சர்ச் கொள்ளை வழக்கில் 2 மாதத்திற்கு பின் குற்றவாளி கைது
X

போலீசாரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி டேனியல்.

குமரியில் சர்ச்சில் 10 பவுன் தங்க சங்கிலியை கொள்ளை அடித்த குற்றவாளியை 2 மாதத்திற்கு பின் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பேருந்து நிலையம் அருகில் புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்திற்குள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பகல் நேரத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஜீன்ஸ் பேண்ட்,நீல நிற சட்டை, தொப்பி, தோளில் பேகுடன் ஆலயத்திற்குள் தொழுவது போல் வந்துள்ளார். தொடர்ந்து அங்கு மாதா சொரூபம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடியை உடைத்து மாதா சொரூபத்தில் இருந்த 5 பவன் தங்க சங்கிலியையும், அதேபோன்று அங்கு வைக்கப்பட்டிருந்த அன்னை மரியாவின் சொருபத்தில் இருந்த மற்றுமொரு 5 பவன் தங்க சங்கிலியை திருடி உள்ளார்.

பின்னர் ஒன்றும் தெரியாதது போல் வெளியே இறங்கி செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் இது சம்பந்தமாக கோவில் நிர்வாகத்தினர் களியக்காவிளை போலீசில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் சம்பந்தமாக களியக்காவிளை போலீசார் சம்பவ இடம் வந்து சிசிடிவி காட்சிகளை கைபற்றி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட நபர் சேலம் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் முத்துகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் சேலம் விரைந்து அங்கு பதுங்கி இருந்த குமரி மாவட்டம் கூடன்குளம் பகுதியை சேர்ந்த டேனியல் என்ற நபரை கைது செய்து களியக்காவிளை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இரண்டு மாதங்கள் கழித்து கோவில் நகையை திருடிய நபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!