குமரியில் சிவாலய ஓட்டம் : குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் வேண்டுகோள்

குமரியில் சிவாலய ஓட்டம் : குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் வேண்டுகோள்
X

 பக்தர்கள் கோபாலா. கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை 24 மணி நேரத்தில் சுற்றி வருவார்கள் சுற்றி வருவார்கள்

குமரியில் சிவாலய ஓட்டம் நடைபெறும் நிலையில் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வரலாற்று சிறப்பு பெற்ற சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் பிப்.28- ஆம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதில் பக்தர்கள் முஞ்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கி திக்குறிச்சி மகாதேவர் கோவில் முதல் நட்டாலம் சங்கரநாராயணர் கோவில் என 12 சிவாலயங்களில் ஓடி சென்று வழிபடுவார்கள். இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கோபாலா. கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை 24 மணி நேரத்தில் சுற்றி வருவார்கள் சுற்றி வருவார்கள்.

இந்நிலையில் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதி, பந்தல் மற்றும் ஒளி, ஒலி, ஜெனரேட்டர் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டுகளில் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் ஒருசில பக்தர்கள் குறுக்கு வழியில் செல்லும் வகையில் பள்ளியாடி அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக ஓடுவதாக திருக்கோவில் நிர்வாகத்திற்கு பல புகார்கள் வந்தன. இதையடுத்து சிவாலய ஓட்டத்தில் பங்கு கொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், தவறான வழித்தடங்களில் செல்ல வேண்டாம் என்றும், திருக்கோவில் பெயரை பயன்படுத்தி தனிநபர் யாராவது பண வசூலில் ஈடுபட்டால் நடவடிக்கை மேற் கொள்ளப்படும், என அந்த அறிக்கையில் கூறி உள்ளது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா