ஜிகா வைரஸ் எதிரொலி சோதனை சாவடியில் சோதனைகள் தீவிரம்

ஜிகா வைரஸ் எதிரொலி சோதனை சாவடியில் சோதனைகள் தீவிரம்
X
கேரளாவில் பரவும் ஜிகா வைரஸ் எதிரொலியாக குமரி எல்லை சோதனை சாவடியில் சோதனைகள் தீவிரமாகி உள்ளது.

கேரளாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அங்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் புதிதாக ஜிகா வைரசும் கேரளாவில் பரவ தொடங்கி உள்ள நிலையில் புதிய வைரசின் தாக்கம் காரணமாக கேரளாவில் இது வரை 14 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் தமிழக கேரளா எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் படி கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் குமரி எல்லை சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டு வாகனங்களில் வருபவர்களுக்கு சோதனை மேற்கொண்ட பிறகே அவர்கள் குமரி மாவட்டத்தில் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!