குமரியில் இந்து இயக்கங்களின் தொடர் போராட்ட அறிவிப்பால் பரபரப்பு நிலவி வருகிறது

குமரியில் இந்து இயக்கங்களின் தொடர் போராட்ட அறிவிப்பால் பரபரப்பு நிலவி வருகிறது
X
குமரியில் இந்து இயக்கங்களின் தொடர் போராட்ட அறிவிப்பால் பரபரப்பு நிலவி வருகிறது.

குமரியில் இந்து இயக்கங்களின் தொடர் போராட்ட அறிவிப்பால் பரபரப்பு நிலவி வருகிறது

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா இந்துக்கள், இந்து கோவில்கள் இந்து மத நம்பிக்கைகள் குறித்தும், நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்..ஆர். காந்தி குறித்தும் தரக்குறைவாக விமர்சித்தார். மேலும், பாரத பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

இதனை தொடர்ந்து, பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் தொடர் போராட்டங்கள் நடத்திய நிலையில், பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர், மேலும் தலைமறைவாக இருந்த பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா இன்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஜார்ஜ் பொன்னையா மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மற்றும் இந்து இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர், மேலும், பல்வேறு கட்ட போராட்டங்களையும் அறிவித்துள்ளதால் குமரியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!