கன்னியாகுமரி கடையாலுமூடு காவல் நிலையத்தில் எஸ்.பி பத்ரி நாராயணன்திடீர் ஆய்வு

கன்னியாகுமரி கடையாலுமூடு காவல் நிலையத்தில்  எஸ்.பி  பத்ரி நாராயணன்திடீர் ஆய்வு
X

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு  காவல் நிலையத்தில் போலீஸ் எஸ்பி பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ட கடையாலுமூடு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சோதனைகள் மற்றும் பாதுகாப்பு பணியினை தீவிரப்படுத்த உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி இன்று அதிகாலை திடீரென கடையாலுமூடு காவல் நிலையத்திற்கு சென்ற அவர் காவல் நிலையத்தை சுற்றி பார்வையிட்டார். பின்பு அங்கு இருந்த ஆறுகாணி மற்றும் கடையாலுமூடு காவல் நிலைய காவல் அதிகாரிகள், ஆளினர்களின் குறைகள் மற்றும் பணிகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து போலீசார் மத்தியில் பேசிய அவர் காவல் நிலையங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்றும், பொது மக்களிடம் பேசும் போது மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், அவர்களிடம் மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், காவலர்கள் தங்களின் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
ai solutions for small business