காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு - எஸ்.பி அதிரடி

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு - எஸ்.பி அதிரடி
X

கன்னியாகுமரி நேசமணி நகர் காவல் நிலையத்தில் போலீஸ் எஸ்பி  பத்ரி நாராயணன் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.அதன் படி இன்று நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு சென்ற அவர் காவல் நிலையத்தை சுற்றி பார்வையிட்டு, காவல் அதிகாரிகள், ஆளினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்பு காவலர்கள் மத்தியில் பேசிய அவர் காவல் துறையினர் காவல் நிலையங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்றும், பொது மக்களிடம் பேசும் போது மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் பொதுமக்களிடம் கண்ணியமாகவும், பொறுமையாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், வாகன தணிக்கை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், காவலர்கள் தங்கள் உடல் நலனில் கவனம் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி