குமரி எல்லை சோதனை சாவடி வழியாக படு ஜோராக நடக்கும் கனிம வளம் கடத்தல்

குமரி எல்லை சோதனை சாவடி வழியாக படு ஜோராக நடக்கும் கனிம வளம் கடத்தல்
X

லாரியில் கடத்தப்படும் கனிவளம்.

குமரிமாவட்ட சோதனை சாவடிகள் வழியாக எளிதில் கனிம வளம் கடத்தப்படுவதை அதிகாரிகள் தடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் 500 முதல் 600 வாகனங்களில் கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக அமைந்து வருகிறது.

இதனை தடுக்க பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் குமரி மாவட்டத்தில் கனிம வளம் கடத்தல் படு ஜோராக நடைபெறுகிறது.

மேலும் அதிக பாரத்தை ஏற்றிக்கொண்டு கடத்தல் லாரிகள் அதிக வேகத்துடன் வருவதால் சாலைகள் சேதம் ஆவதோடு விபத்துகளும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே அதிக பாரம் மற்றும் அதி வேகம் காட்டும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கடந்த 2 மாதங்களாக சோதனை மேற்கொள்ளும் போலீசார் சுமார் 2500 க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு அபராதம் விதித்து உள்ளனர்.

ஆனால் அதிக பட்சமாக 50 கனரக வாகனங்கள் மட்டுமே அனுமதியுடன் செயல்படும் உள்ள நிலையில் மீதம் உள்ள அனைத்து கனரக வாகனங்களும் அனுமதி இன்றியே செயல்பட்ட நிலையில் இது நாள் வரை அந்த வாகனங்களை பறிமுதல் செய்யாதது என் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே கனிம வளங்கள் கடத்தலை தடுக்காவிட்டால் போராட்டங்கள் மேற்கொள்ள போவதாக பல்வேறு அரசியல் கட்சியினர் அறிவித்த நிலையில் ஒரு நாள் மட்டும் கண் துடைப்பிற்காக அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் 10 கடத்தல் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

அதுவும் மறுநாளே விடப்பட்ட நிலையில் தினசரி 500 முதல் 600 வாகனங்கள் கனிம வள கடத்தலில் ஈடுபட்டு வருகின்றன, மேலும் ஆட்சியாளர்கள் துணை இல்லாமல் கனிம வளம் கடத்தல் சாத்தியமில்லை என்ற நிலையில் அதிகாரிகளும் சோதனை சாவடிகளும் எதற்கு என கேள்வி கேட்கும் அளவுக்கு அனைத்து வாகனங்களும் எல்லை சோதனை சாவடிகள் வழியாக சர்வ சாதாரணமாக கடத்தல் நடைபெற்று வருகிறது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கனிம வளங்கள் கடத்துவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடத்தல் முழுவதுமாக தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது திமுக ஆட்சி காலத்தில் படு ஜோராகவும் வேகமாகவும் கனிம வளம் கடத்தப்படுவது குறைவான காலத்தில் இயற்கை அன்னையின் பூமியான கன்னியாகுமரி மாவட்டம் கரிசல் காட்டு பூமியாக மாறும் என்பது நிதர்சனமான உண்மையாக அமைகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!