தமிழக கேரள எல்லையில் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்த 3 பேர் கைது

தமிழக கேரள எல்லையில் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்த  3 பேர் கைது
X
தமிழக கேரள எல்லையில் கஞ்சா பொட்டலங்களை கைமாற்றிய கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில் கேரளாவில் இருந்து தொடர்ச்சியாக குமரி மாவட்டத்திற்குள் கஞ்சா விற்பனையாளர்கள் புதிது புதிதாக படையெடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது தமிழக கேரளா மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளதால் கஞ்சா வியாபாரிகள் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் அரசு பேருந்துகளில் ஏறி வந்து தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் கஞ்சா பொட்டலங்களை கைமாற்றி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் உருவாக்கப்பட்ட தனிப்படை போலீசார் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக மூன்று நபர்கள் பேருந்து நிலையத்திற்குள் சுற்றி திரிந்துள்ளனர் அவர்களை போலீசார் களியக்காவிளை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் மூன்று பேரில் இருவர் கேரள மாநிலம் பாறாசாலை பகுதியை சேர்ந்த சுமன் , மற்றும் ஜஸ்டின் ராஜ் என்றும் மீதமுள்ள ஒருவர் குழித்துறை ஆர்.சி தெருவை சேர்ந்த ஜேம்ஸ் என்பதும் தெரிய வந்தது.இதில் சுமனும் ஜெஸ்டினும் கேரளாவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்து ஜேம்ஸுக்கு கைமாற்றியதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!