கோடி அர்ச்சனை பூஜையுடன் தொடங்கிய செங்கல் சிவன் பார்வதி கோவில் விழா

கோடி அர்ச்சனை பூஜையுடன் தொடங்கிய செங்கல் சிவன் பார்வதி கோவில் விழா
X
செங்கல் சிவன் பார்வதி கோவில் 60 வது ஆண்டு விழா, கோடி அர்சனை பூஜையுடன் தொடங்கியது.

கேராள மாநிலத்தில், திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட செங்கல் என்றும் பகுதியில், புகழ் பெற்ற சிவன் பார்வதி கோவில் அமைந்துள்ளது. கார்த்திகை மாதத்தை முன்னிட்டும், 60 -வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த கோவிலின் ஆண்டை முன்னிட்டும் இங்குள்ள சிவனுக்கு 20-வது கோடி அர்ச்சனை மற்றும் கணபதி ஹோமத்துடன் திருவிழா துவங்கியது.

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியை, கேரளா போக்குவரத்துறை அமைச்சர் ஆன்டனி ராஜ் தொடங்கி வைத்தார். இன்று தொடங்கிய கோடி அர்ச்சனை, மார்ச் 1 ஆம் தியதி வரை தொடர்ந்து நடைபெறும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!