பெட்டி கடையில் பதுக்கி வைக்கப்பட்ட புகையிலை பண்டல் பண்டலாக பறிமுதல்.

பெட்டி கடையில் பதுக்கி வைக்கப்பட்ட புகையிலை பண்டல் பண்டலாக பறிமுதல்.
X
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெட்டி கடையில் பதுக்கி வைக்கப்பட்ட புகையிலை பண்டல்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெட்டி கடையில் பதுக்கி வைக்கப்பட்ட புகையிலை பண்டல்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது,

அதன்படி, கொல்லங்கோடு போலீசார் ஊரம்பு பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர், அதில் ஒரு கடையில் சுமார் 65 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்து தெரியவந்தது. இதனையடுத்து பண்டல் பண்டலாக வைக்கப்பட்டு இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் ஒருவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!