கேரளாவுக்கு கடத்த முயன்ற 350 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 350 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
X

குமரி மாவட்டம் கொல்லங்கோடு வழியாக கேரளாவிற்கு மண்ணெண்ணெய் கடத்தி வேன் பிடிபட்டது

குமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய் 350 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அரசு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கி வருகிறது. இந்த மண்ணெண்ணை கேரளாவில் உள்ளவர்களுக்கு அதிக லாப நோக்கத்துடன் ஒரு சிலர் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை தடுக்க போலீசார் தீவிர முயற்சி எடுத்து கண்காணித்து வரும் நிலையில் நேற்று இரவு குமரி மாவட்டம் கொல்லங்கோடு வழியாக கேரளாவிற்கு கேரள பதிவெண் கொண்ட சிறிய ரக வேன் ஒன்றில் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்து கொண்டு செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து கொல்லங்கோடு போலீசார் திருமன்னம் சந்திப்பு பகுதியில் வைத்து சந்தேகபடும்படி வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை இட முயன்ற போது வேன் டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு தப்பியாேடி உள்ளார்.

உடனே போலீசார் அந்த வேனை திறந்து பார்த்த போது அதனுள் சுமார் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 பிளாஸ்டிக் கேன்களில் 350 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அந்த வேனை மண்ணெண்ணெயுடன் பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!