குமரியில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு

குமரியில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்: 3 பேர் மீது வழக்கு
X

கருங்கல் தெருவுக்கடை பகுதிகளில் உள்ள 3 கடைகளில் இருந்து சுமார் 70 ஆயிரம் ருபாய் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குமரியில் உரிய அனுமதி இன்றி பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் சட்டவிரோதமாக அனுமதி ஏதும் இல்லாமல் பட்டாசுகள் பதுக்கி வைத்து விற்பனை நடைபெற்று வருவதாக கருங்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் கருங்கல் சந்திப்பு மற்றும் தெருவுக்கடை பகுதிகளில் உள்ள 3 கடைகளில் இருந்து சுமார் 70 ஆயிரம் ருபாய் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!