கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய், 420 லிட்டர் பறிமுதல்
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களுக்கு தமிழக அரசு மானிய விலையில் வெள்ளை நிற மண்ணெண்ணெய் வழங்கி வருகிறது.
இந்த மண்ணெண்ணெயை அதிக லாபத்திற்க்காக கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து பணம் ஈட்டி வருகின்றனர் ஒரு சிலர்.
இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் தனிப்படை அமைத்தும் போலீசார் மூலமாகவும் கண்காணித்து வரும் நிலையிலும் கடத்தல் காரர்கள் போலீசாருக்கு தெரியாமல் இரவு நேரங்களில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு வேளையில் கொல்லங்கோடு அருகே உள்ள மீனவ கிராமமான நீரோடி பகுதியில் உள்ள சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு ஒரு சொகுசு ஓமனி வேன் கடந்து செல்ல முயன்றுள்ளது.
அப்போது பணியில் இருந்த காவலர்கள் சந்தேகமடைந்து வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடி உள்ளார்.
இதனையடுத்து போலீசார் வாகனத்தின் உள்ளே பார்த்த போது இருக்கைகளுக்கு இடையே முன்னும் பின்னுமாக 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 கேன்களில் சுமார் 420 லிட்டர் வெள்ளை நிற மானிய மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த மண்ணெண்ணெயை வாகனத்துடன் பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu