கொரோனா தொற்று பரவ உதவும் டாஸ்மாக் மது விற்பனை.

கொரோனா தொற்று பரவ உதவும்  டாஸ்மாக் மது விற்பனை.
X
டாஸ்மாக் கடைகள் இயங்காது.

கோரோணா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் இந்த நாளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்தது.

நோய் தொற்று பரவல் அதிர்ச்சியை விட மது கடைகள் அடைக்கப்படும் என்ற அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த மதுப்பிரியர்கள் ஊரடங்கு நாட்களுக்கு தேவையான மதுவை வாங்கி வைத்து கொள்ள முண்டியடித்தனர்.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

மதுப்பிரியர்கள் கூட்டத்தை காவல்துறை கண்டுகொள்ளாததால் மிக நீண்ட வரிசையில் காத்திருந்த மது பிரியர்கள் முண்டியடித்து கொண்டும் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கூடியதால் அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்