சபரிமலை ஐயப்பனின் தங்க அங்கி ஊர்வலம்: பக்தர்கள் உற்சாக வரவேற்பு

சபரிமலை ஐயப்பனின் தங்க அங்கி ஊர்வலம்: பக்தர்கள் உற்சாக வரவேற்பு
X

பரிமலை ஐயப்பனுக்கு சாத்தி அழகு பார்ப்பதற்காக, திருவிதாங்கூர் மகாராஜா வழங்கிய 453 பவுன் தங்க அங்கி ஊர்வலம் நடைபெற்றது.

சபரிமலை ஐயப்பனின் தங்க அங்கிக்கு வழிநெடுக பக்தர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

மண்டல பூஜைக்கு முதல் நாள் சபரிமலை ஐயப்பனுக்கு சாத்தி அழகு பார்ப்பதற்காக, திருவிதாங்கூர் மகாராஜா வழங்கிய 453 பவுன் தங்க அங்கி ஊர்வலம் நேற்று தொடங்கியது.

பத்தனம்திட்டா, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாளம் முழங்க புறப்பட்ட இந்த தங்க அங்கி ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆரன்முளாவில் இருந்து பம்பை வரையிலான பாதையில் வழிநெடுகிலும் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நாளை மறுநாள் 25ம் தேதி சபரிமலை வரும் தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு அன்று மாலை தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு தீபாராதனை நடக்கும். அதன் மறுநாள் டிசம்பர் 26 தேதி மதியம் மண்டல பூஜை தொடங்கும் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்து உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!