தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - இளைஞர் பலி
விபத்துக்குள்ளான வாகனங்களும், பலியானவரும்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பரப்பனங்நாடு என்ற பகுதியில் சென்றுகொண்டு இருந்த தனியார் பேருந்தின் மீதி எதிரே அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம் நேருக்கு நேராக மோதியது. மோதிய வேகத்தில் பேருந்தின் கண்ணாடிகள் நொறுங்கிய நிலையில் இரு சக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்த போது, பேருந்தின் முன் பக்கம் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நெஞ்சை பதப்பதைக்க வைக்கும் காட்சிகள், தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, கோழிக்கோடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரின் மேற்கொண்ட தொடர் விசாரணையில் விபத்தில் பலியான இளைஞர் 25 வயது மதிக்கத்தக்க எர்ணாகுளம் பகுதியைச் சார்ந்த நியாஸ் என்பது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கேரளா போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu