இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டபோது விபத்து: ஒருவர் பலி

இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொண்டபோது விபத்து: ஒருவர் பலி
X

சிசிடிவி காட்சி.

குமரியில் இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொண்ட போது அதிக வேகம் காட்டியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி, சிறுமி படுகாயம்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனக்கு இருசக்கர வாகனம் ஓட்ட கற்று தரும் படி தனது வீட்டாரிடம் வலியுறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் உறவினரான கீழ் குளம் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் ( 50 ) என்பவர் சிறுமிக்கு இருசக்கர வாகனம் ஓட்டும் பயிற்சி கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி இருசக்கர வாகனத்தை ஓட்ட பின்னால் புஷ்பராஜ் இருந்து வந்த நிலையில், மத்திக்கோடு அருகே உள்ள பெட்ரோல் நிலையம் வரும்போது அதிவேகத்தில் திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதில் தறிகெட்டு ஓடிய இருசக்கர வாகனம் சாலையில் எதிர்புறமாக வந்த கார் மீது அசுர வேகத்தில் மோதியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் புஷ்பராஜ் மற்றும் சிறுமி இருவரும் சாலையில் தூக்கி வீசபட்டுள்ளனர். இதில் பின் தலையில் அடிப்பட்டு புஷ்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், படுகாயம் அடைந்த சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அங்கு சிறுமி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே விபத்து குறித்த நெஞ்சை பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!