குடியிருப்புகளுக்குள் மழை நீர்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு

குடியிருப்புகளுக்குள் மழை நீர்: பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு
X

பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் பாலமடம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

குமரியில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து வெளியேறாத நிலையில் இதற்கான காரணம் குறித்த ஆய்வு தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் நித்திரவிளை அருகே உள்ள பாலமடம், பள்ளத்தோட்டம், ஏலாக்கரை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் சூழ்ந்து வீடுகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின.

இதன் காரணமாக இந்த பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை பூட்டி விட்டு உறவினர்கள் வீடு மற்றும் அரசு முகாம்களில் தங்கி வருகின்றனர். 5 மாதங்களாகியும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் பாலமடம் பகுதிக்கு வந்து பாதிக்கபட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு நடத்தி மழை நீர் வடிகால் ஓடைகளில் இருக்கும் ஆகரமிப்புகளை கண்டறிந்து அகற்றுவதற்கு சர்வே செய்யும் பணியை துவக்கி வைத்தார். அவருடன் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமாரும் வந்து பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி சர்வே பணியை துரிதபடுத்தினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!