குமரி அருகே சிறுமி கர்ப்பம், யார் காரணம் போலீசார் தீவிர விசாரணை

குமரி அருகே சிறுமி கர்ப்பம், யார் காரணம் போலீசார் தீவிர விசாரணை
X

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் மணற்காடு (பைல் படம்)

குமரி அருகே சிறுமி கர்ப்பம் அடைந்தார், இதற்கு யார் காரணம் என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் மணற்காடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த இரண்டு நாட்களாக தொடர் வயிற்று வலி காரணமாக பரிதவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியை பெற்றோர் பாம்பாடி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற நிலையில் மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்த போது சிறுமி 3 மாதம் கற்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்துவிட்டு மணற்காடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சிறுமியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் தன்மை குறித்து மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் குழந்தை இறந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து போலீசாரின் அறிவுறுத்தல் படி சிறுமி கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவரது வயிற்றில் இறந்த நிலையில் இருந்த குழந்தையை வெளியே எடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது சிறுமி மருத்துவ சிகிச்சையில் இருக்கும் நிலையில் மணற்காடு போலீசார் சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடுத்தர வயதுடைய ஒருவர் தன்னை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த நபர் யார் என்ற விவரம் தெரியவில்லை அது குறித்த கூடுதல் விவரங்களை சேகரிக்கும் முயற்சியில் மண்றகாடு போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!