குமரியில் நகராட்சியோடு ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

குமரியில் நகராட்சியோடு ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்
X

கொல்லங்கோடு நகராட்சி பகுதியோடு ஒட்டி இருக்கும் சூழால் ஊராட்சி பகுதியை நகராட்சியோடு இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாெதுமக்கள் பாேராட்டம் நடத்தினர்.

குமரியில் நகராட்சியோடு ஊராட்சியை இணைக்க முயலும் அரசை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

குமரி மாவட்டத்தின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட பேரூராட்சியாக கொல்லங்கோடு பேரூராட்சி உள்ளது, அதனை மட்டும் கருத்தில் கொண்டு தமிழக அரசு கொல்லங்கோடு பேரூராட்சியை நகராட்சியாக மாற்றம் செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து கொல்லங்கோடு பகுதி நகராட்சிக்கு போதுமான பரப்பளவு இல்லாத காரணத்தாலும் வருமானத்திற்கு உரிய வணிக நிறுவனங்கள் அதிக அளவில் இல்லாத காரணத்தாலும் கொல்லங்கோடு நகராட்சி பகுதியோடு ஒட்டி இருக்கும் சூழால் ஊராட்சி பகுதியை நகராட்சியோடு இணைக்கும் முயற்சி நடந்து வருகிறது.

இதனை கண்டித்து சூழால் ஊராட்சி தலைவர் இவான்ஸ் தலைமையில் ஊரம்பு சந்திப்பில் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது, சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் அரசின் முடிவை கைவிட கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஊராட்சி தலைவர் இவான்ஸ் கூறும் போது சூழால் ஊராட்சியை நகராட்சியோடு இணைத்தால் 100 நாட்கள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் 600 க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும். வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு வழங்கக்கூடிய வீடுகள் கிடைக்காமல் போகும் வீடுகளின் வரி, சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்டவைகள் உயரும் இதனால் கிராம் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். இதனை தடுக்க தமிழக அரசு இணைப்பு திட்டத்தை கைவிட வேண்டும் இல்லையேல் தொடர்ந்து போராட்டம் வெடிக்கும் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!