துண்டிக்கப்பட்ட இணைப்பு சாலையை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

துண்டிக்கப்பட்ட இணைப்பு சாலையை  கண்டுகொள்ளாத அதிகாரிகள்
X

துண்டிக்கப்பட்ட சாலை.

குமரியில் துண்டிக்கப்பட்ட இணைப்பு சாலையை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் மெதுகும்மல் பஞ்சாயத்தில்- 1-ம் வார்டில் நெய்யார் இடதுகரை சானல் பாய்ந்து செல்கிறது. கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக அந்த பகுதி முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. இதில் அங்குள்ள இணைப்பு சாலையில் ஒருபுறம் தண்ணீர் அடித்து சென்றது.

இதனால் அந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு சுமார் 60 அடி ஆழத்தில் குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பயன்படுத்த முடியாத சுழல் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறைக்கும், சம்மந்தபட்ட அதிககாரிகளுக்கும் பல முறை மனுக்கள் அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் எட்டாத நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே இந்த ஆழமான பகுதியினால் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்னாள் இதனை சரிசெய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
the future of ai in healthcare