குமரியில் 10414 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளது.!

குமரியில் 10414 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளது.!
X
குமரியில் நோட்டாவுக்கு 10 ஆயிரத்து 414 வாக்குகள் விழுந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டது.

குமரி மாவட்டத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் சிலர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாமல் நோட்டாவை தேர்வு செய்துள்ளனர்.

அதன்படி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மட்டும் மொத்தம் 4938 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளது. சட்டமன்ற தொகுதிகளில் 5476 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகி உள்ளது.

மேலும் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் சேர்த்து குமரி மாவட்டத்தில் 10414 வாக்காளர்கள் இந்த முறை நோட்டாவை தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil