வடகிழக்கு பருவமழை: குமரி கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

வடகிழக்கு பருவமழை: குமரி  கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
X

கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள்.

வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் குமரி கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா சாமி ஆய்வு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை உயர் அதிகாரிகளுக்கான ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஜோதி நிர்மலாசாமி, கலந்து கொண்டார்.

தொடர்ந்து வடகிழக்கு பருவமழை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் மாபெரும் தூய்மை பணி முகாம்கள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இக்கட்டான காலகட்டத்தில் அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!