தரமற்ற சாலை - சாலையை பாய் போல் சுருட்டிய இளைஞர்களின் வீடியோ வைரல்

தரமற்ற சாலை - சாலையை பாய் போல் சுருட்டிய இளைஞர்களின் வீடியோ வைரல்
X

கன்னியாகுமரியில் போடப்பட்ட தரமற்ற தார் சாலை

குமரியில் சாலை தரமற்ற முறையில் போடப்பட்ட நிலையில் சாலையை பாய்போல் மடித்து இளைஞர்கள் வெளியிட்ட வீடியோ வைரல் ஆனது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தரமற்று போக்குவரத்துக்கு பயன்படாத அளவிற்கு மாறிய தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க மத்திய அரசு முதற்கட்டமாக ரூபாய் 14.99 கோடி ரூபாய் ஒதுங்கியது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் மார்த்தாண்டம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை தார் கொண்டு நிரப்பி சீரமைக்கும் பணி நடந்தது.

இந்த பணி தரமாக செய்யப்படாமல் மேலோட்டமாக செய்து சென்றுள்ளனர் எனக்கூறி அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சீரமைக்கப்பட்ட தார்சாலைகளை பாய் போல் பெயர்த்து மடித்து எடுத்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

ஏற்கனவே சாலை சீரமைப்பு பணியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் இருந்த நிலையில் தற்போது இளைஞர்கள் சாலையை பாய் போல் சுருட்டி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Tags

Next Story
ai marketing future