கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்: 12 வயது சிறுவன் பலி - பொதுமக்கள் பீதி

கேரளாவை மிரட்டும் நிபா வைரஸ்: 12 வயது சிறுவன் பலி - பொதுமக்கள் பீதி
X
கேரளாவை மீண்டும் மிரட்டும் நிபா வைரஸ் பாதிப்பிற்கு 12 வயது சிறுவன் பலி ஆனது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம், சூலூர் சாத்தாமங்களம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி அன்று காய்ச்சல் அறிகுறிகளுடன் கோழிகோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அந்த சிறுவனின் ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள வைரலஜி (ஆய்வாகதிற்கு) அனுப்பி வைக்கப்பட்டது. 3 முறை நடத்திய ஆய்வில் சிறுவனுக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிர் இழந்தார்.

இதனை தொடர்ந்து கேரளா சுகாதாரதுறை அதிகாரிகள் அந்த சிறுவனுடன் நெருங்கி பழகிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மாதிரிகள் சோதனை செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே மக்கள் அனைவரும் தற்போது புதிய வைரசால் பீதி அடைய தேவை இல்லை என கேரளா மாநில சுகாதார துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

கேரளாவில் கொரோனா தொற்றினால் அதிகம் பேர் பாதிக்க பட்டு வரும் நிலையில் தற்போது நிபா வைரசால் சிறுவன் உயிரிழந்திருப்பது கேரள மாநிலத்தில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ஆயுர்வேத முறையில் உங்க உடலை அழகாக பாதுகாக்க ..!ஆரோக்கியமான முறையில் உங்களுக்கான  சில வழிகள்..! | Wellhealth ayurvedic health tips in tamil