இருசக்கர வாகனத்தை அலேக்காக அபேஸ் செய்த மர்ம நபர்

இருசக்கர வாகனத்தை அலேக்காக அபேஸ் செய்த மர்ம நபர்
X

குமரியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் மர்ம நபர்

குமரியில் இருசக்கர வாகனத்தை அலேக்காக அபேஸ் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மார்க்கெட்டிங் வேலை பாரத்து வரும் இவர், பணி முடிந்து வீட்டிற்கு வந்து தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்தி வைத்துவிட்டு தூங்க சென்றுள்ளார்.

மறுநாள் காலையில் எழும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது, இதையடுத்து மணிகண்டன் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது நள்ளிரவு வேளையில் மர்ம நபர் ஒருவர் மணிகண்டன் வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு நடந்து சென்று அவரது வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

அந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!