குமரியில் குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்புகள்: வனத்துறையினர் மீட்பு

குமரியில் குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்புகள்: வனத்துறையினர் மீட்பு
X

தக்கலை அருகே வெட்டி கோணம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர்.

குமரியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த இரண்டு மலைப்பாம்புகள் வனதுறையினரால் பிடித்து காட்டிற்குள் விடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வெட்டி கோணம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் சில தினங்களாக மலைப்பாம்பு வலம் வருவதாக கூறப்பட்டது.

அதை தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் மலைப்பாம்பை தேடி வந்த நிலையில் இன்று குடியிருப்பு பகுதியில் நெளிந்து கொண்டு இருந்த மலை பாம்பு சிக்கியது. தொடர்ந்து இளைஞர்கள் துணையுடன் மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர் அவற்றை பாதுகாத்தனர்.

இதே போன்று திங்கள் நகர் பகுதியிலும் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் சென்ற மலைப்பாம்பையும் வனத்துறையினர் மீட்டனர். இந்த இரு மலைப்பாம்புகளும் சுமார் பத்து அடி நீளமும் சுமார் 25 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. இந்த இரு மலைப்பாம்புகளையும் பெருஞ்சாணி அணை அருகே உள்ள வனப்பகுதியில் விடுவதாக வனத்துறையினர் கூறினர்.

கடந்த ஆறு மாதத்திற்குள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள் பிடிக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

சமீபகாலமாக பெய்துவரும் மழை காரணமாக மலைப்பகுதிகளில் இருந்து ஆறுகள் கால்வாய்கள் மூலம் இழுத்து வரப்படும் பாம்புகள் நீரோட்டம் குறைவான பகுதிகளில் வரும்போது கரையில் ஏறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா