மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீது மோதிய இருசக்கர வாகனம்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீது மோதிய இருசக்கர வாகனம்
X

விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தும் போலீசார்.

பேருந்து லைட் வெளிச்சம் கண்ணை மறைத்ததால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீது மோதிய இருசக்கர வாகனம்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே விரிவிளை பகுதியை சேர்ந்தவர் விசுவம்பரன் ( 60 ). இவர் நித்திரவிளை சந்திப்பு பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இதனிடையே கடையை அடைத்து விட்டு இரவு 8 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் விசுவம்பரன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சாலையின் நடுவே நடந்து சென்றார்.

அப்போது எதிரே ஒரு அரசு பேருந்து வந்துள்ளது. அந்த பேருந்தில் எரிந்த முகப்பு விளக்கு வெளிச்சம் முகத்தில் பட்டதால் நிலை தடுமாறிய விசுவம்பரன் சாலையின் நடுவே நடந்து சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீது தெரியாமல் மோதி உள்ளார்.

இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசபட்ட நிலையில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குழித்துறை அரசு மருத்துவமனைக்கும் விசுவம்பரனை மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil