பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் உயர்வு: கிராம பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் உயர்வு: கிராம பகுதிகளில் எம்எல்ஏ  ஆய்வு
X

ஆய்வு செய்யும் எம் எல் ஏ காந்தி.

பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் உயர்ந்து நீர் வெளியான கிராம பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்து குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவதிப்படுவதை அறிந்து குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் மற்றும் பாஜக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தனர்.

Tags

Next Story
ai healthcare products