தாயின் இரண்டாவது கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு
ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனை (பைல் படம்)
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு பாரதி நகரில் வசித்து வருபவர் அந்தோணிராஜ். இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில் இரண்டாவதாக சுஜா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
அவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் மூலம் மகேஸ்வரி (10) உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது குழந்தைகள் மூவரும் சுஜா மற்றும் அந்தோணிராஜுடன் வசித்து வருகின்றனர்.
அந்தோணி ராஜ் மற்றும் சுஜா இருவரும் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வரும் நிலையில் குழந்தைகள் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு விடுதியில் தங்கி படித்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி மகேஸ்வரி அருகில் உள்ள கடையில் மிட்டாய் வாங்க சென்றுள்ளார், ஆனால் கடைகார் சிறுமி களவு செய்து உள்ளதாக பொய் சொல்லி திருப்பி அனுப்பி உள்ளார்.
விட்டுக்கு சென்ற சிறுமி சகோதரர்களுடன் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் அங்கு வந்த அந்தோணிராஜ் கடையில் சென்று சிறுமி திருடியதாக கூறி சண்டையிட்டதோடு வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து மூன்று குழந்தைகளின்மேல் ஊற்றியுள்ளார்.
மற்ற இரண்டு குழந்தைகளும் ஒடிவிட மகேஸ்வரி ஓடுவதற்கு முன் தீ வைத்து உள்ளார். இதனால் உடலில் தீ பற்றி அலறி துடித்த மகேஸ்வரியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைகாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைக்கு தீ வைத்த போது அந்தோணிராஜுக்கும் காயம் ஏற்பட்டது.
அவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மகேஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார், இந்நிலையில் உடல் முழுவதும் தீ காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து சிறுமியின் வளர்ப்பு தந்தை அந்தோணி ராஜ் மீது பணகுடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu